புலம்
பெயர் மண்ணில் – எம்தழிழர்தமை ஒழுங்கிணைத்துஅரசியல்க் காய்நகர்த்தி
நின்றபரிதியெனும் சூரியனை பாரிசில் கரும் புகார்கள்மறைந்ததடா – என் என்
போம் தளராத உறுதியும் குலையாத ஞானமும் தானைத்தலைவனின் வழி காட்டலில் –
வெற்றிக்களம் பல கண்ட தீரமும்எளிமை வாழ்க்கையும் எதற்கும்
அஞ்சிடா – உணர்வும் தாயகப்பணியின்றி – சிறிதும் தன்னலங்கருதாத் தியாகமும்
தன்னகத்தே கொண்ட எங்கள் பரிதியே! உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை – என்றபாரதி வரியின் நாயகனாய்த் திகழ்ந்தவனே! ‘உன்
இழப்பால் – இன்று உலகத்தமிழினமேவிழிநீரில் வலி சுமந்துதவியாய்த்
தவிக்கிறது”நீ விழிமூடித் தூங்கினாலும்நின் நினைவெல்லாம்புலம் பெயர் தழிழர்
நாம்இருக்கும் வரை – கனவாகாஎதுவரினும் விடமாட்டோம்’எம் பணியை நீ நம்பு
பரிதியாய் மதியாய்காரிருள் அகல உன்பணிதொடர்வோம்.
‘தமிழினத்தைச் சூழ்ந்துள்ள ஈனரை இனம்
கண்டு ஒதுக்கிப் புறம் காண்போம்’தமிழீழ விடுதலை நோக்கியபாதையில்
ஒற்றுமையாய் அணிதிரண்டு காய் நகர்த்திதமிழீழ மலர் காண்போம் – அதுவே
தியாகத்தின் திருவுருவாம் – எம் பரிதிக்கு நாம் செய்யும்உண்மை அஞ்சலியாம் –
ஆம்தன்தலைவனை, தந்தையை இழந்துதவிக்கும் குடும்ப உறவுகளோடு – எம்
துயர்பகிர்ந்து அவர் பணி தொடரஉறுதி எடுப்போம்.
விழி நீரில் வலி சுமந்துஎமது கண்ணீர் அஞ்சலிகள்!
வீரர்கள் விழுவதில்லை
கோடிக்கனக்கானோர்களை உருவாக்கிவிடுவார்கள்

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சின் வீர அஞ்சலி
No comments:
Post a Comment