
நாடுகளை கடந்து ஈழத்தமிழர்களினால் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன், பல்வேறு துறைசார் வல்லுனர்களை கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேலவை (செனற்சபை) பிரதிநிதிகளும் முதன்முறையாக இந்த நேரடி அமர்வில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.
நேற்றைய அங்குராப்பண தொடக்கமர்வில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மதிப்புக்குரிய இமானுவல் அடிகளார் அவர்கள் கலந்து கொண்டிருந்தமை சிறப்பானதொரு விடயமாக அமைந்திருந்தது.
இரண்டாம் நாள் ( 30-11-2012 ) பாராளுமன்ற அமர்வில் செனற்சபையினால் சமர்பிக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்வழிப்பாதை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
முதலாம் நாள் தொடக்கமர்வு :
சுதந்திர தமிழீழம் என்ற முழக்கத்துடன் ஜெனீவா ஐ.நா முன்றிலில் தன்னுயிரை ஈகம் செய்த தியாகி முருகதாசனை நினைவுரும் பிரித்தானியாவின் முருகதாசன் திடலில் உள்ள உள்ளரங்கில், முதன்நாள் தொடக்கமர்வு இடம்பெற்றிருந்தது.
பொதுமக்களும் பார்வையாளர்களாக பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்த அங்குராப்பண நிகழ்வில், பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுவூட்டியிருந்தனர்.
சர்வதேச மனித உரிமைவாதியும் சட்டவாளருமான கரன் பார்க்கர், பேராசிரியர் பீற்றர் சால்க், முன்னாள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபேர்ட் எவன்ஸ்உட்பட பல பிரதிநிதிகள் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment