Monday, December 03, 2012

அரசியல் தீர்வுக்கு டெலோ முன்மொழிவு தயாரிப்பு

TELOஇனப்பிரச்சினைக்கு  அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான டெலோ என்று அழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது.
டெலோவின் பொதுச் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தனியான முன்மொழிவை தயாரிப்பதற்றகாக  குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்த குழுவில் டெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன், பொது செயலாளர் ஹென்றி மகேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், என். ஸ்ரீகாந்தா, மற்றும் ஜே.கருணாகரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்த முன்மொழிவை தயாரிப்பிற்கு கட்சியிலுள்ள புத்திஜீவிகளின் ஆலோசனைகளும் பெறப்படும் என அவர் குறிப்பிட்டார்.
ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, டெலோவின் மாநாட்டை  ஜனவரி 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடத்துவது எனவும் நேற்றைய பொதுச் சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment