Sunday, December 02, 2012

யாழ்ப்பாணத்தில் எமது இனத்திற்கு எதிராக மும்முனைத் தாக்குதல் ஜனநாயகத்திற்கு விழுந்த சாவுமணியா? :- வவுனியா நகரசபை பதில்த் தலைவர்

m.rathanஇலங்கைத்தீவில் சமாதானம் ஐக்கியம் புரிந்துனர்வு என்று கூறுகின்ற சிங்கள அரசாங்கம் தமிழினத்தின் மீதான அடக்கு முறைகள், வன்முறைகள் என்பனவற்றை கைவிட்டதாக இல்லை இன் நிலை தொடருமானால் மீன்டும் ஒரு ஜெனிவாவை இவ் அரசாங்கம் சந்திக்குமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.
யாழ்ப்பானத்தில் நடந்தேறிய சம்பவங்கள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக் காட்டியுள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 28, 28 யாழ்ப்பானத்தில் எமது இனத்திற்கு எதிராக மூன்று தாக்குதல்களை அரசாங்க படைகள் நடாத்துயுள்ளன இது ஐனநாயகத்திற்கு விழுந்த சாவு மணியா? என எமது இனத்தின் மத்தியில் தோன்றுகின்றது. இந்நிலைகள் தொடராமல் இருக்க இவ் அரசாங்கம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் முதற்கட்டமாக நவம்பர் 27 யாழ் பல்கலைக்கழக மாணவர் மீதான அடக்கு முறையாகும்.
இலங்கையில் காணப்படும் பல்கலைக் கழகங்களுக்குள் யாழ் பல்கலைக் கழக மாணவர்களே காலத்திற்கு காலம் பல இடர்களை சந்தித்து வந்துள்ளனர். நவம்பர் 27 பாரிய இராணுவ நடவடிக்கையை செய்வது போல் யாழ்.பல்களைக் கழக வளாகத்தை சுற்றிவளைத்தனர் இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர் இதன் பின்னர் நவம்பர் 28ல் ஐனநாயக மரபிற்கு அமைவாக அமைதியான வழியில் நீதி கேட்டு போராட்டத்தை முன்னெடுத்த மாணவ மாணவிகள் பொலிசாரினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர்.
பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர் மாணவ சழூகத்துக்கு மீதான வன்முறையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. 1975ம் ஆண்டு யூன் மாதம் 05 திகதி பொன் சிவகுமாரன் என்ற மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டமைதான் பல தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டனர் என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்கு அடுத்த கட்டமாக ஊடக வியலாளர்கள் தாக்கப்பட்டையை குறிப்பிடலாம் உலகிலேயே ஊடகவியலாளர்கள் கொலைசெய்யப்படுவதும் காணாமல் போனமை தாக்கப்பட்ட சம்பவங்கள் அன்றும் இன்றும் இடம்பெற்ற இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நாடு இலங்கைதான் உண்மைச் செய்திகளை வெளிக்கொண்டு வருகின்ற ஊடவியலாளர்கள், ஊடநிறுவனங்கள் தாக்கப்படுவதை உடன் நிறுத்த வேண்டும்
இதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மீது தாக்குதல் முயற்சித்தமையும் அவரது வாகனத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தியமையும் ஐனநாயகத்தை மீறும் செயலாகும். இதற்கு முன்னரும் போர்க்காலத்தில் யோசப் பரராஜசிங்கம் ரவிராஜ், சிவனேசன், போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்தமையும் போருக்கு பின்னர் தமிழினத்திற்காக அஞ்சாது குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை கொலைசெய்யும் நோக்குடன் அனுராதபுரம் நொச்சிகாமத்தில் வைத்து தாக்குதல் நடாத்தியமையும் நடந்தேறிய சம்பவங்களாகும் இவ்வாறான நடவடிக்கை தொடராது இருக்க ஆக்கபூர்வமான விடையங்களை மேற்கொள்ள இவ் அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்பட வேன்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment