மக்கள்
ஆணையையும் அவர்களுக்கான உரிமையையும் எவரும் காட்டிக்கொடுக்க இடமளிக்க
முடியாது. அவர்களது எதிர்பார்ப்பையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதில்
அர்ப்பணிப்புடன் செயற்படுவது முக்கியமாகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சின் தேசிய
மாநாடும் உள்ளூராட்சி சபைகளின் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களைக்
கெளரவிக்கும் நிகழ்வும் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
தற்போது உள்ளூராட்சி சபைகள்
மக்களுக்குச் சிறந்த சேவையாற்றி வருகின்றன. சில உள்ளூராட்சி மன்றத்
தலைவர்கள் அளப்பரிய சேவை புரிந்து கெளரவத்தையும் விருதுகளையும் பெற்றுக்
கொள்கின்றனர். இதேபோன்று ஏனைய உள்ளூராட்சி சபைப் பிரதிநிதிகளும்
அர்ப்பணிப்புள்ள சேவை செய்து கெளரவத்துக்கும் விருதுக்கும் தம்மை
தகுதியாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.
நாட்டை மீட்டு ஒன்றிணைக்க நாம் முற்பட்டபோது அதற்கு எதிரான பல தடைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது.
நாம் எமது ஆட்சிக் காலத்தில் சகல வரவு
செலவுத் திட்டங்களிலும் உள்ளூராட்சி சபை பிரதேசங்களை முன்னேற்று வதில்
கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். இது எமது பொறுப்பும் எமக்கான
உரித்துமாகும்- என்றார்.
No comments:
Post a Comment