Wednesday, January 09, 2013

கஜேந்திரகுமாரின் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும்!- கருணாநிதி

karunanithy_kajenthirakumar_001இலங்கையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு இலங்கை அரசு விடுத்துள்ள பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பிரபல வழக்கறிஞரும், ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரனுமான கஜேந்திரகுமார் சட்டத்திற்குப் புறம்பாக தீவிரவாதிகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதரிப்பதாகக் கூறி, அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இலங்கை புலனாய்வுத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தகவல் வந்துள்ளதாம். இதில் இருந்து இலங்கை அரசு எப்படியெல்லாம் தமிழர்களை குறி பார்த்து குறுக்கு வழியில் பழி வாங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த நிலைமைகளையெல்லாம் போக்கவே தி.மு.க. சார்பில் டெசோ மாநாடு நடத்தி, உலக நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அதன் தீர்மானங்களை மத்திய அரசுக்கும், ஐ.நா. மன்றத்திற்கும் நேரடியாகவே வழங்கியிருக்கிறோம்.
இப்போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டுமென்று தி.மு.க.தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment