
தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் (வயது 59) இன்று (15.6.2013) மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். இவர் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது அமைதிப்படை ௨ .வான நாகராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ படம். இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய மணிவண்ணன், ‘’நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந் திருப்பேன் , தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன் என்றார். ஈழத் தமிர்கள் மேல் மிகுந்த பற்றும், உணர்வும் கொண்டவர் இயக்குநனர் மணிவண்ணன் அவர்கள்.
என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக்கூடாது. என் உடம்பை சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை’’ என்று கூறினார்.
இன்று காலமான மணிவண்ணன் உடலை சீமான் அவர்களே பொறுப்பேற்றுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. அவரது ஆசைப்படி புலிக்கொடி போர்த்தப்பட்டுள்ளது. அவரது நெருங்கிய நண்பராண நடிகர் சத்தியராஜ் அவர்களும் உடன் இருந்து ஈமைக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் என்று மேலும் அறியப்படுகிறது.

http://youtu.be/jD4czG6r0KY
http://youtu.be/UfLtDVaalE4
No comments:
Post a Comment