
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தப்படி, ஈழத்தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு இலங்கை மாகாணங்களை இணைத்து, அந்நாட்டு அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தை காலிசெய்ய, சிங்கள இனவாத அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன. இதையடுத்து, அந்நாட்டு அமைச்சரவையும் இலங்கையின் எந்த இரு மாகாணங்களையும் இனி அதிபரே நினைத்தாலும் இணைக்கமுடியாது என முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
. இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகனுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதற்குப் பதில் அளித்து, மன்மோகன் அனுப்பிய கடிதத்தை கருணாநிதி ஒரு வாரம் கழித்து வெளியிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 13வது திருத்தம் தொடர்பாக இந்திய அரசின் கருத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிப்போம் என்று கூறியுள்ள மன்மோகன், இந்த விவகாரம் இலங்கைக்குள் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் முடிவெடுக்கவேண்டிய விவகாரம் என்று இதுவரை இல்லாத இந்திய அரசின் புதிய முடிவையும் குறிப்பிட்டுள்ளார். இதுதான் இந்திய அரசின் நிலை என்பதாக பிரதமரே குறிப்பிடுவதால், ராஜீவால் முன்வைக்கப்பட்ட தீர்வையுமே காங்கிரஸ் கட்சி கைவிட்டுவிட்டது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
13வது திருத்தம்தான் தீர்வு எனக் கூறிவந்த காங்கிரசை, வேறு வழியில்லை எனக் கூறி நம்பி இருந்த பல்வேறு தரப்பினரும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
source :Posted : திங்கட்கிழமை, ஜுன் 17 , 2013 12:15:20 IST
No comments:
Post a Comment