Tuesday, June 25, 2013

காட்டில் மறைந்திருந்த நகுலனுக்கு கலியாணம்: கப்சா அம்பலம் !





ஆனால் இதனைப் பலர் நம்பவில்லை. ராம் மற்றும் நகுலன் காட்டில் தான் இருப்பதாக தொடர்ந்து கூறிவந்தார்கள். இதில் பெருத்த வெடி ஒன்றும் உள்ளது. தமிழ் நாட்டில் இருந்து ஒருவர் இலங்கைக்கு கிளம்பிச் சென்று தாம் ராம் மற்றும் நகுலனைச் சந்தித்ததாகத் தெரிவித்தார். அவர்கள் அடர்ந்த காட்டில் இருக்கிறார்கள். அவர் அசைவுக்காக பல போராளிகள் காத்து நிற்கிறார்கள். கண் அசைத்தால் போதும் அவர்கள் இலங்கை இராணுவம் மீது தாக்குதல் நடத்துவர்கள் என்று எல்லாம் தமிழ் நாட்டில் எழுதினார்கள். கனரக ஆயுதங்களோடு அவர்கள் காட்டில் (அதுவும் மரங்களில்) இருப்பதாக இவர்கள் எழுத , மீண்டும் துளிர்விட்டார் ராம் மற்றும் நகுலன். இது உண்மையா பொய்யா என்று தெரியாமல் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் பல தமிழர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று இவை அனைத்துக்கும் முடிவு கிடைத்துவிட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை நீர்வேலியில் நகுலனுக்கு கல்யாண வீடு நடந்துள்ளது. இதில் பல முன் நாள் புலிகளின் பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளார்கள். இதற்கு சிங்கள புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்பை வழங்கியுள்ளார்கள்.

ராம் மற்றும் நகுலனின் கப்சா வேலைகள் இன்றோடு முடிவுக்கு வந்தது.

source:athirvu 

No comments:

Post a Comment