Tuesday, June 18, 2013

லண்டனில் சிங்கள காடையர் தமிழரை தாக்கினர் !

18 June, 2013 by admin1
லண்டனில் நேற்றுமாலை(திங்கள்) சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கியுள்ளார்கள். லண்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கிரிகெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இப் போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்கு வெளியே தமிழர்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை அமைதியான போராட்டம் மூலம் தெரிவித்தார்கள். இலங்கையை போர்குற்ற விசாரணைக்கு உற்படுத்தவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். நேற்றைய தினம் இறுதிப் போட்டி என்ற காரணத்தால் சுமார் 15,000 ஆயிரம் சிங்களவர்கள் அங்கே கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பலர் வெளியே செல்லும்போது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது.<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/GogW1ZlsUnU?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>

நடைபெற்ற இப் போராட்டத்தில் குறைவான தமிழர்களே கலந்துகொண்டுள்ளார்கள். இதனை அவதானித்த சிங்களவர்கள் தாம் பெரும்பாண்மையாக அங்கே இருப்பதை நன்கு உணர்ந்துள்ளார்கள். இதன்காரணமாகவே அவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அதிர்வு இணையத்துக்குத் தெரிவித்துள்ளார்கள். தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைப் பார்த்த பொலிசார் உடனே ஓடிவந்து தமிழர்களைப் பாதுகாத்து, பின்னர் பிறிதொரு இடத்துக்கு நகர்த்தியுள்ளார்கள். குறைந்த அளவில் தமிழர்கள் இருந்தாலும் அங்கு நின்றவர்கள் சிங்களவர்களுக்கு அஞ்சி அவ்விடத்தில் இருந்து சென்றுவிடவில்லை. தொடர்ந்தும் தமது அமைதிப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்கள். இதனால் மேலதிகப் பொலிசார் அங்கே வரவளைக்கப்பட்டு, தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கள காடையர்கள் இலங்கையில் தான் தமிழர்களை கொன்றும், தாக்கியும், மானபந்தப்படுத்துகிறார்கள் என்றால் தற்போது புலம்பெயர் நாடுகளிலும் அவர்கள் திருந்தியபாடாக இல்லை. லண்டன் வந்தும் தமிழர்கள் மேல் உள்ள இனத்துவேஷம் அவர்களுக்கு இன்னும் தீர்ந்தபாடாக இல்லை. காட்டுமிராண்டிகள் போல நடந்துகொண்ட சில சிங்கள காடையர்களை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது.(வீடியோ இணைப்பு)

No comments:

Post a Comment