Saturday, June 29, 2013

The Jaffna Library is intellectual soul of the Eelam Tamils. In this 5-part series the birth and death of this library is depicted. Please view them.

தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது

20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை நாள். திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கான கொடுமையை சிங்களம் அரங்கேற்றிய நாள் இன்று. (மே31 – யூன் 2.1981) நாம் மறந்துகொண்டிருக்கும் பல விடயங்களில் இதுவும் ஒன்றாகி விடுமோ என்ற ஐயம் தோன்றிவருகிறது. உலகில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிலான நூறாயிரம்(100000) நூல்களை எரித்தழித்த நாள்.

எரியும் நினைவுகள் காணொளி

part 1-https://www.youtube.com/watch?v=VOTpZfFzNrI

part2-https://www.youtube.com/watch?v=En9PRrF4BDw

part3-https://www.youtube.com/watch?v=yOTNRiaCVv8

part4-https://www.youtube.com/watch?v=1Vjx5iuRyHI

par5-https://www.youtube.com/watch?v=3eLi4d1ryE8

தமிழ்வின்னுக்காக ஈழம்ரஞ்சன்

No comments:

Post a Comment