விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் இரண்டரை லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கினர்.
விழாவில் சூர்யா பேசுகையில், கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளை விட கல்விக்கு செய்கின்ற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அகரம் பவுண்டேசன் அடிதட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
650க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment