logoகடந்த வாரம் பிரான்சு நாட்டிற்க்கு வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற  ஆய்வுக்குழுவையும், வெளிவிவகார அமைச்சையும் சந்தித்து தமிழர்களுக்கு எதிராக சிறி லங்கா அரசினது செயல்பாடுகளை தெரிவித்து சென்ற ஒரு வாரத்தின் பினனர், சிறி லங்கா அரசு மேற்கொண்டிருக்கும் நில அபகரிப்பு,- வெலி ஓயா பிரதேசத்தில் ராணுவத்தின் தலைமையில், பவுத்த பிக்குகளின் முன்னிலையில்  ஒரு புதிய சிங்களக் குடியிருப்பு உருவாக்கப்பட்டிருப்பதும், அம்பாறையில் 4000 ஏக்கர் விவசாய காணிகள் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதையும்,
திருகோணமலை- முல்லைத்தீவு பிரதேசத்திற்கு இடையே உள்ள கொக்கிளாய் பகுதியில், சிங்கள மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதன் மூலம் தமிழ் மக்களின்  பொருளாதார வாழ்நிலையினை அழித்துக்கொண்டிருப்பதையும் எடுத்து கூறும் முகமாக  இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
நில அபகரிப்புக்கான  ஆதாரங்களும் முன்வைக்கப்பட்ட நேரத்தில், கடந்த வாரம் திரு சுரேஷ் பிரேமச்சத்திரன் உடன் நடந்த ஆக்கபூர்வமான சந்திப்புக் குறித்துப் பேசப்பட்டது. பிரான்சு வெளிவிவகார அமைச்சு மிகுந்த கரிசனையுடன்            தமிழர்களின் பிரச்சனைகள் குறித்துச் செவிமடுத்ததாகவும், தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வு, பொதுநலவாய மகாநாடு சிறி லங்காவில் நடைபெற இருப்பது பற்றிய விடயங்களும் பேசப்பட்டது. இந்த சந்திப்பு பிரான்சு நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பல கேள்விகளுக்கு பதிலாக இருக்கக் கூடுமென பிரான்சு தமிழருக்கான பாராளுமன்ற ஆய்வுக் குழுவின் தலைவர் திருமதி மாரி ஜோர்ஜ் புப்பெ தெரிவித்தார்.
சிறி லங்காவிற்கு வருகைதந்து நிலைமைகளை  நேரடியாக பார்வையிடுமாறு தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாங்கள் வரவேற்பதாகவும், தாம் சுதந்திரமாக தமிழர் பகுதியை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைக்குமானால் அது பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் கூறினார்.
ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் உடனடியாகவும் அவசரமானதாகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்
தொடர்பில் குறிப்பாக நில அபகரிப்புகளை        தடுத்திடும் வகையில், பாராளுமன்ற            வெளிவிவகாரத் துறையின் குழுவிற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்கு தெரிவிப்பதாகவும், மேலும் தமிழ் மக்களுக்கு நிரந்தரத்தீர்வினைக்பெற்றுக்கொடுக்கத் தாம் முழு அளவில் தொடர்ந்தும் செயல்படுவோம் என்பதையும்அவர் வலியுறுத்திக்கூறினார்.
logo