Wednesday, October 23, 2013

18 ஈழத் தமிழர்களை திணறத் திணற கொன்றவர் கடைசியில் சிக்கினார் !




அங்கும் அவர் ரக் வண்டி ஓட்டியே பிழைப்பு நடத்தி வந்துள்ளார். பல்கேரியா இவர் தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திடம் சில தகவல்களை 2013 மே மாதம் வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்க பொலிசாரால் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர், ரக் வண்டி ஓட்டிவந்த இவர் வாகனத்தை பிழையாக செலுத்தியுள்ளார். இதனை அவதானித்த பொலிசார் அவரை இடைமறித்து , விசாரணைகளை நடத்தியுள்ளனர். பின்னர் நடந்ததை நாம் சொல்லவா வேண்டும் ? அமெரிக்க பொலிசார் துளைத்து எடுத்துவிட்டார்கள். அதுமட்டுமா அவரை பல்கேரிய நாடு தேடிவருவதையும் அறிந்துள்ளார்கள். உடனே கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். 18 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பல்கேரியா இவரை தனது நாட்டுக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது.

ஆனால் தனது நாட்டு பிரஜைகள் 18 பேரை கொலை செய்த இன் நபர் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவே இல்லை. அவர்களை பொறுத்தவரை 18 தமிழர்கள் ஒழிந்தார்கள் என்று நினைத்திருப்பார்கள் அல்லாவா ! இது தான் தமிழர்களுக்கு என்று தனி நாடு இல்லையேல் தனி அரசு ஒன்று தேவைப்படுகிறது என்று நாம் அடித்துக்கொள்கின்றோம். [சமாதான அரசியல்], [இணக்க அரசியல்] , [சிங்களவர்களோடு சேர்ந்து வாழுவோம்] , [இது கணவன் மனைவி பிரச்சனை] என்று சொல்பவர்கள் காதுகளுக்கு இது எட்டுமா ? இல்லை இது குறித்து அவர்கள் பேசுவார்களா ? குற்றம் இழக்கப்பட்டது வேறு நாடாக இருக்கலாம். ஆனால் இறந்தவர்கள் இலங்கையர்கள் அல்லவா ? அமெரிக்க பிரஜைகள் 18 பேர் கொல்லப்பட்டால் அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா ? தமிழன் தான் நாதியற்றவன் ஆகிவிட்டான் !
source:athirvu 

No comments:

Post a Comment