போரில்
உயிர்நீத்த மாவீரர்களின் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கும்,
புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும் அவர்களுடைய உறவினர்களும்,
உரித்துடையவர்களும் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண
சபை வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என அதிர்வு இணையம அறிகிறது. சாவகச்சேரி பிரதேச சபையின் அமர்வுகள் தவிசாளர் சிற்றம்பலம் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போது இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. பிரதேச சபை உறுப்பினர் சிறிரஞ்சன் பிரேரணையை முன்மொழிய உபதவிசாளர் அதனை வழிமொழிந்து பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment