Saturday, October 26, 2013

உலகப் புகழ் "ஆன் சான் சு கி" இலங்கை குறித்து கருத்து தெரிவித்தார் !



மியான்மார் நாட்டின்(பர்மா) எதிர்கட்சி தலைவியான "ஆன் சான் சு கி" தற்சமயம் பிரித்தானியாவுக்கு வந்துள்ளார். அவர் நேற்றைய தினம் பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்துள்ளார். 10 டவுனிங் வீதியில் நடைபெற்ற இச் சந்திப்பின்போது இலங்கையில் நடைபெறும் காமன்வெலத் மாநாடு தொடர்பாகவும் இருவரும் பேசியுள்ளார்கள். நீங்கள் இலங்கை சென்றாலும், பாதிக்கப்பட்ட தரப்பு மக்களை நிச்சயமாக சந்திக்கவேண்டும் என்று அவ்வேளை, ஆன் சான் சுகி அவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மார் நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்க ஆன் சான் சுகி யின் தந்தையார் பெரும் உதவிகளைப் புரிந்தார். ஆன் சான் சு கி, பிரித்தானியாவில் தனது படிப்பை முடித்துக்கொண்டு மியான்மார் திரும்பிய வேளை அங்கே இராணுவ ஆட்சி நடைபெற்றது.

ஆன் சான் சு கியின் தந்தையார் மறைவுக்குப் பின்னர், இராணுவத்தினர் ஆன் சான் சு கியை சிறையில் அடைத்தார்கள். கடந்த 20 வருடங்களாக சிறையில் இருந்த ஆன் சான் சு கி அவர்கள் 2010ம் ஆண்டு விடுதலையானார். உலகில் நெல்சன் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக, உலகத் தலைவர்கள் மதிக்கும் ஒரு நபராக ஆன் சான் சு கி இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகிறார். இன் நிலையில் அவர் இலங்கை தொடர்பாக கூறியிருக்கும் கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்று பிரித்தானிய பிரதமர் பார்வையிடவேண்டும் என்ற அவரது கருத்தை டேவிட் கமரூன் அவர்களும் வரவேற்றுள்ளார்.


No comments:

Post a Comment