லண்டனில் நேற்று நடைபெற்ற பாரிய ஆர்பாட்டம் !
இலங்கை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் பிரித்தானியா வந்தவேளை, அவர் வருகையை
எதிர்த்து தமிழர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.
நேற்று(திங்கட்கிழமை) மாலை இப் போராட்டம் லண்டனில் நடைபெற்றது.
பிரித்தானியாவில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரே இதனை ஒழுங்கு
செய்திருந்தார்கள். இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெலத் உச்சி மாநாட்டிற்கு,
வேண்டிய முன் ஏற்பாடுகளைச் செய்யும் நோக்குடனே ஜி.எல் பீரிஸ் பிரித்தானியா
வந்திருந்தார். அவர் கலந்துகொண்ட மாநாடு மண்டபம் முன்பாகவே தமிழர்கள் கூடி
பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம்
ஆகும்.
நடைபெற்ற ஆர்பாட்டத்தின் புகைப்படங்கள் அதிர்வின் வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

SOURCE:ATHIRVU
No comments:
Post a Comment