Tuesday, October 22, 2013

கொலைசெய்யும்போது கமராவில் மாட்டிக்கொண்ட நபர் !

இங்கே நீங்கள் பார்க்கும் புகைப்படத்தில் கிட்டனி என்னும் 37 வயது நபர் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் இவர் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் பல. இவர் உண்மையான முகம் தற்போது தான் வெளியாகியுள்ளது. அதுவும் வினை விதைத்தவன் வினை அறுப்பான என்று சொல்லுவார்களே, அதுபோல இவர் பொருத்திய ஸ்பை(இரகசிய) கமரா இவரையே காட்டிக்கொடுத்துவிட்டது.

அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மாநிலத்தில், 11 வது மாடியில் இருந்து லீசா என்னும் பெண் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்டது. இச் சமபவம் கடந்த 2011ம் ஆண்டு நடந்தது. இருப்பினும் லீசாவின் காதலன் கிட்டனி மேல் பொலிசாருக்கு சந்தேகம் இருந்தது. லீசா தற்கொலை செய்ய முன்னர், அவர் 11 மாடி உயரத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்திருக்கிறார். பின்னர் அவரை யாரோ தள்ளிவிட்டார்கள் என்று நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவித்தன. ஆனால் அவர்களால் அந்த தள்ளிவிட்ட மனிதரை சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை. இதனால் பொலிசார் சந்தேகப்பட்டாலும், இதனை நிரூபிக்க முடியவில்லை. ஆனால் உண்மை அழிந்துபோகுமா ? கிட்டனி பொருத்திய இரகசியக் கமரா அவருக்கே யமனானது.


கிட்டனியும் லீசாவும் பல காலமாக காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் திருமணம் முடிக்க கூட எண்ணி இருந்திருக்கிறார்கள். ஆனால் கிட்டனி மிகவும் சந்தேக புத்தி கொண்டவர். தனது காதலி தன்னை ஏமாற்றுவதாக அவர் நினைத்துள்ளார். இதனால் லீசா வசிக்கும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் (வீட்டினுள்) இரகசியமாக ஒரு கமராவை பொருத்தி லீசாவின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்து வந்துள்ளார். லீசாவுக்கும் பிறிதொரு நபருக்கும் இருந்த நட்பை பிழையாக விளங்கிக்கொண்ட இவர், 2011ம் ஆண்டு ஜூலை 30ம் திகதி அவருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டு, இறுதியில் தன் கைகளால் அவர் வாயைப் பொத்தி தறதறவென்று இழுத்துச் சென்று மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.

சுமார் 150 அடி உயரத்தில் இருந்து விழுந்த லீசா, சம்பவ இடத்திலேயே மரணமானார். ஆனால் லீசா தற்கொலை செய்துகொண்டார் என்றும். தான் அவரை தடுக்க முற்பட்டதாகவும் கிட்டனி பலகாலமாக கூறிவந்தார். அவர் பொருத்தியிருந்த இரகசியக் கமரா, வீட்டுக்கு வெளியே உள்ள (பல்கனியில்) நடக்கும் சம்பவத்தை படம் எடுக்காது என்று, கிட்டனி நினைத்துள்ளார். அங்கே தான் மாட்டிக்கொண்டார் இந்த நபர். லீசாவின் வாயைப் பொத்திக்கொண்டு அவர் அப் பெண்ணை இழுத்து செல்லும் காட்சி நன்றாகவே பதிவாகியுள்ளதோடு அதனை பொலிசார் சாமர்த்தியமாக கைப்பற்றியும் விட்டார்கள். இதனையடுத்து தற்போது வழக்கு முடிவுக்கு வர உள்ளது. கிட்டனிக்கு நிச்சயம் சிறைத்தண்டனை கிடைக்கும் என்று அவுஸ்திரேலியப் பொலிசார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள். மனிதர்களுக்கு எந்த வியாதிவேண்டும் என்றாலும் வரலாம். ஆனால் சந்தேகம் என்னும் வியாதி மட்டும் வந்துவிட்டால் போதும்... வாழ்க்கை அழிவது நிச்சயம் !


No comments:

Post a Comment