
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பிரிட்டனின் பிரதமர் செல்வதைக் கண்டித்து லண்டனில் மாபெரும் பேரணி ஒன்றை பிரித்தானிய தமிழர் பேரவை இன்று நடத்தியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு Embankment நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்து 10, Dஒந்னிங் ஸ்ட்ரேட் முன்பாக இப்பேரணி நிறைவடைந்துள்ளது.
பிரித்தானிய பிரதமரின் இலங்கை பயணத்தை நிறுத்த வேண்டும், பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், இலங்கையில் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களை மக்கள் எழுப்பியிருந்தார்கள்.

No comments:
Post a Comment