
புலிகளை அழித்துவிட்ட மகிந்தர், மிடுக்குடன் செல்லும் மகிந்தர், கடாபியோடு கை குலுக்கிய மகிந்தர் என்று, மகிந்த ராகபக்ஷவை ஒரு பெரும் வீரர் போல காண்பிக்கும் படங்களையே நீங்கள் இதுவரை பார்தது உண்டு. ஆனால் உங்கே உள்ள அரிய புகைப்படம் ஒன்றை பாருங்கள். மகிந்தர் ஷிராணியை மணம் முடிக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது ! திருமணத்தில் பேய் அறைந்தது போல மகிந்தர் உட்கார்ந்து உள்ளார் !
இதனை நாம் சொல்லவில்லை ஒரு சிங்கள பத்திரிகை சில காலத்திற்கு முன்னர் வெளியிட்ட புகைப்படம் தான் இது. இதுவே மகிந்தரின் உண்மையான முகம் என்ற தலைப்பில் அந்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பயந்துபோய் உள்ள மகிந்தர் எவ்வாறு ஜெனிவாவை எதிர்கொள்வார் என்ற தலைப்பில், செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டார் மகிந்தர் என்று சிங்களவர்கள் நினைப்பதாகவும், அவர்கள் அவ்வாறு ஒரு மாயையில் அவர்கள் சிக்கித் தவிப்பதாகவும், குறிப்பிட்டுள்ளது அப் பத்திரிகை.
ஆனால் இலங்கையில் கடந்த 5 வருடங்களில் சாதாரண மக்கள் வாழ முடியாத அளவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அது மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே மகிந்தரை வீட்டுக்கு அனுப்ப தயாராகுங்கள் என்ற பொருள்பட இச் செய்தி சிங்கள பேப்பரில் வெளியாகியுள்ளமையும், இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
No comments:
Post a Comment