இலங்கைக்கு
இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்பட மாட்டாது என பாரதீய ஜனதா கட்சியின்
பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமது கட்சி ஆட்சிப்
பொறுப்பை ஏற்றுக்கொண்டால் இலங்கைக்கு எந்தவிதமான இராணுவ உதவிகளும்
வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் தேர்தல்
நடைபெறவுள்ள நிலையில் ஆழும் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் தோல்வியை
தழுவும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன் நிலையில் ப.ஜ.க தான் இம்முறை
தேர்த்தலில் வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது.இதேவேளை இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படாது என நரேந்திர மோடி தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மக்கள் தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment