Tuesday, February 25, 2014

நிக்கோபர், அந்தமான் தீவுகளில் புலி உறுப்பினர்கள்: பரபரப்பு தகவல் !


இந்தியாவின் நிக்கோபர் மற்றும் அந்தமான் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருக்கக் கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் தங்கியிருக்கக் கூடும் என்ற கருத்தை மறுப்பதற்கில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மியன்மார், பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்த தீவுகளுக்கு அடிக்கடி ஊடுருவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் மொத்தமாக 572 தீவுகள் காணப்படுவதாகவும் இதில் 38 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. தீவுகளில் வாழ்ந்து வரும் தமிழ் சனத்தொகை தமிழீழ விடுதலைப் புலிளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது. 1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இலங்கைத் தமிழர்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடர்ந்த காட்டுப் பகுதிகள் நிறைந்த தீவுகளில் புலிப் போராளிகளுக்கு அடைக்கலம் வழங்குவது சுலபமானது என குறிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment