Saturday, February 08, 2014

அல்ஜசீரா மீது பாலித கோகன்ன பாச்சல்: வீடியோ இணைப்பு !



இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் மற்றும் இன அழிப்பை, உலக்கிற்கு வெளிக்கொண்டுவரும் சர்வதேச ஊடகங்களில் ஒன்று அல்ஜசீரா ஆகும். நேற்றைய தினம் இத்தொலைக்காட்சி, இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோகன்னவை அழைத்து பேட்டி ஒன்றை எடுத்துள்ளார்கள். அல்ஜசீராவின் நிருபர் கேட்ட கேள்விகளால் கடும் ஆத்திரம் அடைந்த பாலித கோகன்ன, அதனை வெளிக்காட்டாமல் சாந்தமாக இருப்பது போல நடத்தது, அப்பட்டமாக தொலைக்காட்சியில் அப்படியே தெரிகிறது. சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில், முள்ளிவாய்க்காலில் உள்ள பல மனிதப் புதைகுழிகளை இலங்கை இராணுவம் திட்டமிட்டு அழித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனை அல்ஜசீரா நிருபர் பாலித கோகன்னவிடம் கேட்டார்.


தடுமாறிய கோகன்ன இது "சிறிய விடையம்" என்று ஒரு கட்டத்தில் பதில் கூறினார். பாலியல் பலாத்காரம், சித்திரவை, மற்றும் மனிதப் புதைகுழிகள் என்பன உங்களுக்கு "சிறிய விடையமா" என்று அல்ஜசீரா நிருபர் திரும்பக் கேட்டார். அதற்கும் திக்குமுக்காடிய அவர், எங்கள் மீது குற்றஞ்சுமத்தலாம் ஆனால் ஆதாரம் இருக்கவேண்டும் என்று சமாளித்தார். பின்னர் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்தார்களே அதுபற்றி சர்வதேசம் எப்போது விசாரணை நடத்தப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் தரும் வகையில், அல்ஜசீரா நிருபர் ஒருவிடையத்தை எடுத்துவிட்டார். அதாவது இரு தரப்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இலங்கை இராணுவமே பாரிய அளவில் குற்றங்களை இழைத்துள்ளது என்று அறிக்கை கூறுவதாக நிருபர் பாலித கோகன்னவுக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து கடும் ஆத்திரமடைந்த கோகன்ன, இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் கடும் போக்காளர்களாள் நெறிப்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இவ்வாறு ஒரு தீர்மானத்தை கொண்டு வருவது, இலங்கையில் இனப்பிரச்சனை தீர வழிவகுக்காது என்றும், மாறாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார். (காணொளி இணைப்பு)

http://youtu.be/rdZZNYePXhk

No comments:

Post a Comment