சனல்
4 கின் ஆவணப்படத் தயாரிப்பாளர் காலம் மக்ரே அவர்களால், தயாரிக்கப்பட்ட
போர் தவிர்ப்பு வலையன் என்னும் ஆவண திரைப்படத்தை, இந்தியாவில் உள்ள
பெரும்பான்மையான மக்கள் பார்க்கவில்லை. அத்தோடு இந்தியாவில் உள்ள மக்கள்
அதனை இணையமூடாகவும் பார்க முடியாத நிலை இருந்தது. சனல் 4கின் இணையத்தில்,
இந்த ஆவணப் படம் இருந்தாலும் இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து
வருபவர்கள் அதனை பார்வையிட முடியாத நிலை காணப்பட்டது. இதனை நிவர்திசெய்யவே,
தமிழகத்தில் (சென்னையில்) வரும் 22ம் திகதி, போர் தவிர்ப்பு வலைய ஆவணப்
படம் திரையிடப்படவுள்ளது. இதற்கு காலம் மக்ரே அவர்களால் இந்தியா செல்ல
முடியாத நிலையும் காணப்படுகிறது.காரணம் இந்திய அரசு அவருக்கு விசா வழங்குவதை முற்றாக நிறுத்தியுள்ளது. இன் நிலையில் ஸ்கைப் ஊடாக அவர் திரையில் பேசவுள்ளார். அவரது உரை முடிவடைந்ததும் ஆவணப் படத்தை திரையிட உள்ளதாகவும், பின்னர் தமிழகத்தில் உள்ள மக்கள் எவ்வாறு அதனை பார்கலாம் என்ற தகவல்களும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனூடாக மார்ச் மாதத்திற்கு முன்னதாக, தமிழகத்தில் பாரிய எழுச்சி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்திய அரசு அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment