இலங்கை
தீவில் தமிழ் இன மக்கள் மீது மேற்கொள்ளபபட்டுவரும் இனப்படுகொலை, நில
அபகரிப்பு , போன்றவற்றிற்கு சர்வதேச சுயாதின விசாரணை வேண்டி உலகமெங்கும்
பரந்து வாழும் தமிழ் மக்கள் ஏக காலத்தில் போராட்டம் ஒன்றை இன்று
நடத்தவுள்ளார்கள். இப் போராட்டமானது இந்தியா, லண்டன், ஜெர்மனி போன்ற பல
நாடுகளில் ஏககாலத்தில் நடத்தப்படவுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு
இப்போராட்டம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் வாசல்ஸ்தலம் முன்பாக
நடைபெறும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) அறிவித்துள்ளார்கள். டந்த 60 வருடங்களுக்கு மேலாக சிங்கள ஏகாதிபத்திய அரசுகளினால் திட்டமிட்டு மேட்கொள்ளபபட்டுவரும் இனபடுகொலைகள், நிலஅபகரிப்பு, மற்றும் 2009ம் ஆண்டு 70000 அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தமை போன்றவற்றிற்கு சர்வதேச சுயாதின விசாரணை வேண்டியே இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. எனவே அனைத்து தமிழர்களும் இதில் நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment