புதிய
போர்குற்ற ஆதாரங்கள் சில ஈழத் தமிழர் தரப்பிடம் சிக்கியுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளது. இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை, அங்கே
தற்காலிக முகாம்களை அமைத்த இலங்கை இராணுவத்தினர், தாம் கைப்பற்றி
கிராமங்களுக்குச் சென்று, அங்கு மீதமுள்ள மக்களை சிறைப்பிடித்துள்ளார்கள்.
பின்னர் அவர்களை அந்த தற்காலிய முகாம்களுக்கு கொண்டுசென்றுள்ளார்கள்.
இவர்களில் பலர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களை சித்திரவதை
செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தான், தற்போது தமிழர்கள் கைகளில்
சிக்கியுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.குறித்த இந்த வீடியோவும் இலங்கை இராணுவத்தில் உள்ள சிலரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்டதாக மேலும் அறியப்படுகிறது. ஏற்கனவே கைகளையும் கண்களையும் கட்டி தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் கொலைசெய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்தது. தற்போது ஈழத் தமிழ் பெண்களை இலங்கை இராணுவம் நேரடியாக துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகவுள்ளது , உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவிக்கலாம். மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சனல் 4 தொலைக்காட்சியூடாக இந்த வீடியோ வெளியிடப்படலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.
குறித்த இந்த வீடியோ ஒரு போர்குற்ற ஆதார வீடியோ என்றும், தாம் இதனை ஆய்வு செய்து வருவதாகவும், இந்த வீடியோவை பகுப்பாய்வு செய்தபின்னரே தாம் அதனை வெளியிட முடியும் எனவும் காலம் மக்ரே மேலும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் சில பெண்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதும் மற்றும் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தும் காட்சிகள் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.source:thirvu
No comments:
Post a Comment