Thursday, March 27, 2014

சனல்-4 மீண்டும் ஒரு அதிர்ச்சிக் காணொளியை வெளியிட்டது: - மகிந்தராசபக்ச மற்றும் மருத்துவர் ஒருவரது சாட்சியம் ஆகியன உள்ளடக்கம்

http://bcove.me/fug8cboq
News Serviceஇறுதி யுத்தத்தில் வன்னியில் என்ன நடந்தது என சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது. குறிப்பாக இறுதி நாட்களில் பாதுகாப்பு வலையங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும் கருத்துக்களும் இறுதி யுத்தம் காலத்தில் அங்கு கடமையாற்றிய வைத்தியரின் வாக்குமூலங்களும் இக்காணொளியில் காண்பிக்கப்படுகின்றது.
   இலங்கை அதிபர் மகிந்தவின் விளக்கங்களும் வைத்திய அதிகாரி முன்னர் இராணுவ ஊடக மையத்தில் தெரிவித்த கருத்துக்களின் உண்மை தன்மைகள் தொடர்பிலும் விளக்கமாக விபரிக்கப்படுகின்றது. இலங்கை அரசால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு முன்னரே திட்டமிட்டு புலனாய்வுத்துறையாலும் இராணுவத்தினாலும் ஒவ்வொருநாளும் அம்மாநாட்டில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு தாம் தெரிவிக்கவேண்டிய பதில்களும் ஓர் நாடகம் போலவே தாம் தயார்படுத்தப்பட்டதாக சனல்-4 இடம் தெரிவித்தார். தான் மட்டுமல்ல அங்கு கடமையாற்றி எல்லா வைத்தியர்களுக்கும் உண்மை தெரியும் என்றும் இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல் மற்றும் பொருளாதாரத்தடை காரணமாக பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்ததாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment