Monday, March 03, 2014

பெங்களூருவில் தனித் தமிழர் சேனை பொதுச் செயலாளரும், வழக்குரைஞருமான பெ.நா.தேவதாஸ் (எ) இறையடியான் (53) மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தார்

http://www.youtube.com/watch?v=x7IgUNRscSM&list=UUm8YfrBdLR7_i7C8gKy5-hw&feature=share
http://www.youtube.com/watch?v=xS6Tl6glHHw&feature=share&list=UUm8YfrBdLR7_i7C8gKy5-hw&index=2
http://www.youtube.com/watch?v=a0iZwZ6NRwM&feature=share&list=UUm8YfrBdLR7_i7C8gKy5-hw&index=4

பெங்களூருவில் தனித் தமிழர் சேனை பொதுச் செயலாளரும், வழக்குரைஞருமான பெ.நா.தேவதாஸ் (எ) இறையடியான் (53) மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தார்.நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசியப் படையில் (ஐஎன்ஏ) பங்காற்றிய நாராயணசாமியின் 2-ஆவது மகனான தேவதாஸ், 1961-ஆம் ஆண்டு பிறந்தார்.

கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலைத் திறப்பு, தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழர் உரிமை போராட்டங்களை முன்னின்று நடத்தினார். திருமணம் செய்து கொள்ளாமல் பொதுச் சேவையில் இவர் ஈடுபட்டு வந்தார்.
இவரது மறைவுக்கு திராவிடர் விடுதலைக் கழக கர்நாடக மாநிலச் செயலாளர் இல.பழனி, கர்நாடக கன்னடர்- தமிழர் கூட்டமைப்புத் தலைவர் ஐ.எம்.எஸ்.மணிவண்ணன், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் சி.இராசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன. 
ஞாயிற்றுக்கிழமை (மாரச் 2) காலை 10 மணியளவில் சிவன்செட்டி கார்டன், நாலாரோடில் இருந்து இவரது இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.

9980591064, 9343634333.

No comments:

Post a Comment