Wednesday, March 19, 2014

சவுதி: குடும்பத்தோடு ‘பிச்சையெடுத்து’ ரூ 6 கோடி சொத்து சேர்த்த 100 வயது பாட்டி மரணம்


சவூதியில் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை தடுக்க புதிய சட்டம்ரியாத்: சவுதியில் 100 வயது பாட்டி ஒருவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், அவரது மரணத்திற்கு துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும், அப்பாட்டி பிச்சையெடுத்தே ரூ 6 கோடி மதிப்பிற்கு சொத்து சேர்த்த விபரம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

சவுதி அரேபியாவின் ஜிட்டா பகுதியில் வசித்து வந்தவர் இசா என்ற 100 வயது பாட்டி. கண்பார்வை இழந்து, உடல் நலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் பிச்சையெடுத்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இவரது தாய் மற்றும் சகோதரி கூட தங்கள் வாழ்நாள் முழுவதும் பிச்சைக்காரர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசா பாட்டி தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இசா பாட்டிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர்.

அங்கு, பிச்சையெடுத்துக் காலத்தை ஓட்டியவர் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காலமான இசா பாட்டி 4 வீடுகளுக்கு சொந்தக்காரராம். அதுமட்டுமல்லாமல் ஏராளமாக நகைகள், தங்க நாணயங்கள் வாங்கி அவரது வீட்டில் குவித்து வைத்திருந்திருக்கிறார். மொத்தத்தில் அவரின் சொத்து மதிப்பு ரூ.6 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் அவர் தனது தாய், சகோதரி என குடும்பம் சகிதமாக பிச்சை எடுத்து சேர்த்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment