Wednesday, March 19, 2014

தமிழக மீனவர்களின் கண்ணீர் கதை


news
தழிழகம் சென்றடைந்த மீனவர்கள் இலங்கை சிறையில் நல்ல உணவு குடிநீர் இன்றி சிரமத்தை எதிர்கொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

தொண்டி மற்றும் நம்ததாளை பகுதியைச் சேர்ந்த 24 மீனவர்களை கடந்த 3, 5 ம் திகதிகளில் ராமேஸ்வரம் சங்குமால் கடற்பரப்பில் மீன் பிடித்து வீடு திரும்பும் வேளை இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.


இலங்கை கடலில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 5 படகுகளும்; கைப்பற்றப்பட்டு அநூராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந் நிலையில் கடந்த 13 ம் திகதி மன்னார் நீதிமன்ற நீதிபதி இவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம் சென்றடைந் மீனவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் நாங்கள் கச்சதீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த வேளையே இலங்கை  கடற்படையினர் கைது செய்ததுடன் 3 லட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை அடித்து துன்புறுத்திய பின்னரே சிறையில் அடைக்கப்பட்தோடு துர்நாற்றத்துடன் கூடிய உணவையே தந்ததாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


source: uthayan

No comments:

Post a Comment