கொமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பொறுப்பில் உள்ள இலங்கையின் நிலை குறித்து
தொடர்ந்தும் கவலை கொள்வதாக கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர்
தெரிவித்துள்ளார். நேற்று கொண்டாடப்பட்ட கொமன்வெல்த் தினத்தை முன்னிட்டு
விடுத்துள்ள செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 21 ஆம் நூற்றாண்டில்
இலங்கைக்கு தலைமைப் பதவியை வழங்கியதன் மூலம் கொமன்வெல்த் நாடுகளின்
நம்பகத்தன்மை பெறுமதி இழக்கப்படலாம். கொமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியை
தற்போது கொண்டுள்ள இலங்கை, கொமன்வெல்த் அமைப்பின் மதிப்பு காப்பதில்
தோல்வி கண்டுள்ளது.
எனவே அந்த நாடு மனிதஉரிமைகளுக்கு மதிப்பு தரவேண்டும். கனடாவை பொறுத்தவரை கொமன்வெல்த் அமைப்புக்கு தொடர்ந்தும் தீவிர உதவியை வழங்கும் என்றும் ஹாப்பர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment