நெய்வேலி என்.எல்.சி., ஊழியர்களுக்கும், மத்திய பாதுகாப்பு படையினருக்கும்
இடையே கை கலப்பு ஏற்பட்டது. மத்திய தொழில் படையினர் துப்பாக்கியால்
சுட்டதில் ஒப்பந்த பணியாளர் ராஜ்குமார் என்பவர் உயிரிழந்தார். இதனால்
ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் பிணத்துடன் கடலூர்- விருத்தாச்சலம் ரோட்டில்
மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில்
வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடும், தடியடியும் நடத்தப்பட்டது. 50 க்கும்
மேற்பட்டோர் காயமுற்றனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.
No comments:
Post a Comment