Friday, March 21, 2014

உண்மையை மூடி மறைக்க எம்மைக் கையாண்டது அரசாங்கம்! – ஜெனிவாவில் போட்டுடைத்தார் வைத்திய கலாநிதி வரதராஜா.

News Serviceஇறுதிக்கட்டப் போர் நடந்த பகுதிகளில் பணியாற்றிய, வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா நேற்று ஜெனிவாவில், போர்க்கால மீறல்கள் குறித்து, விளக்களித்துள்ளார். சனல்4 இயக்குனர், கெலும் மக்ரேயுடன் இணைந்து, அவர் நேற்றைய கூட்டத்தில் பல்வேறு மீறல்கள் குறித்தும், தமது அனுபவங்கள் குறித்தும் விபரித்தார். “என்னால் வாகரை முதல் மாத்தளன் வரை நடந்தவற்றை குறிப்பிட முடியும். சுயாதீன வைத்தியத்துறையான எம்மால், மக்கள் பணியை முழுமையாக செய்ய அரசதரப்பு தடைகளை ஏற்படத்தியதுடன் அது மக்கள் பாரிய பின்னடைவைச் சந்திக்க காரணமாயிருந்தது. வாகரை பிரதேசத்தை இராணுவம் ஆக்கிரமித்த போது பலத்த உயிரிழப்புக்களும் மனித உயிர்கள் வதையும் இடம் பெற்றதை யாவரும் நன்கறிவர்.இதற்கு இன்று பல சாட்சியங்கள் உண்டு.

  
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வந்த எனக்கு கருணா குழு, பிள்ளையான் குழு, மற்றும் ஈபிடிபியின் அச்சுறுத்தலும் மிரட்டலும் இருந்தது. இதுனால் மீண்டும் என்னை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றது. அங்கும் முன்னர் பட்ட கஷ்டங்களுக்கு ஈடான அதீத கஷ்டங்கள். இறுதி யுத்தத்தில் மக்கள் பட்ட பாடுகள், இழப்புக்கள், அவலங்களை கூறுவதற்கு வரிகளில்லை இதை யார் அறிவார். நான் மட்டும் மக்களுக்கு வைத்தியம் செய்யபட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. முழுமையான வைத்திய உபகரணம் இல்லை மக்களை பராமரிக்க வைத்திய வசதிகள் இல்லை. இவ்வாறாக பாரிய அழிவுகளைச் சந்தித்து மீண்டு வந்த எம்மை அரசு மிரட்டி அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களை மூடி மறைக்க எம்மை கையாண்டது. எமது பய பீதி அதற்கு அனுமதித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment