Thursday, March 20, 2014

ஐ.நாவிற்கு தகவல்களை வழங்குவோர் குறித்து கண்காணிக்கப்படுகின்றது


amnesty_CIஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல்களை வழங்கி வருவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தகவல்களை வழங்கி வரும் இலங்கையர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு, அரசாங்கம் விசேட புலானய்வுப் பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் மனித உரிமை விவகாரம் போன்றவற்றுக்காக குரல் கொடுக்கும் நபர்கள் மீது அரசாங்கம் தொடர்ந்தும் பல்வேறு வழிகளில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது,.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவோரை அமைதிப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள மடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூகீ பெர்னாண்டோ மற்றும் பிரவீன் அருட்தந்தை ஆகியோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

No comments:

Post a Comment