Saturday, March 29, 2014

கடைசி நேரத்தில் மூன்று நாடுகள் காலை வாரிவிட்டனவாம்! – கவலையில் இலங்கை அரசு.

 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், இலங்கை தோல்வியடைந்தமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கவலை தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், தானும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் சகல நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் நாட்டின் நிலைமைகள் பற்றி விளக்கமளித்திருந்தோம். 26 ஆம் திகதி இரவு வரை மூன்று முக்கிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தன.

   இறுதி நேரத்தில் அந்நாடுகள் தமது முடிவை மாற்றிக் கொண்டமை எமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தியா தீர்மானம்க்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலை வகித்தமை ஜனாதிபதியும் நாடு அடைந்த வெற்றி என்றும் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment