இலங்கை இராணுவத்துக்கு இந்தியா சட்ட விரோதமான உதவிகள் எதனையும் வழங்கவில்லை
என்று, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய இராணுவ துருப்பினர் இலங்கையில்
விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009ம் ஆண்டு காலப்பகுதியில் போரிட்டதாக
தெரிவித்து இந்திய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து
கருத்து தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தின் போது இந்தியா பல்வேறு உதவிகளை
வழங்கியதாகவும், எனினும் அவை சட்ட விரோதமான உதவிகள் இல்லை. இந்தியாவினால்
ஆயுதங்கள், பயிற்சிகள், புலனாய்வுத் தகவல்கள் போன்றன வழங்கப்பட்டன என்று
தெரிவித்தார்.
எனினும் அவர் இந்திய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டமை தொடர்பில் நேரடியான பதில் எதனையும் வழங்கவில்லை. அத்துடன் அவர் இந்த குற்றச்சாட்டை நிராகரிக்கவும் இல்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment