
நாட்டில் சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற
தேசிய ஐக்கிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அனைவருக்கும் ஒரே சமமான உரிமை உள்ளது. அனைவரும் சம உரிமையுடன்
சமத்துவமாக வாழ முடியும். இனவாதம் பேசி மக்களை குழப்ப சிலர்
முயற்சிக்கின்றனர்.அது ஒருநாளும் சரிவராது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment