எல்லா சமூகங்களிதும் அபிலாசைகள் மற்றும் மனக்குறைகள் சிறிலங்காவின்
ஒட்டுமொத்த அபிவிருத்திக்கும் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று
ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் தெரிவித்துள்ளார். போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் விதித்துள்ள தடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நேற்றுப் பதிலளித்த அவர்,
2009ம் ஆண்டு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட கூட்டறிக்கையைச் சுட்டிக்காட்டி, எல்லா சமூகங்களிதும் அபிலாசைகள் மற்றும் மனக்குறைகள் சிறிலங்காவின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நிலையான நல்லிணக்கம், அமைதி, அபிவிருத்தியை அடைவதற்கு, எல்லா இலங்கையர்களும் பரந்தளவில் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று ஐ.நா கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
soorce::PP
No comments:
Post a Comment