Wednesday, May 14, 2014

 கூடங்குளம் அணு உலையில் வெந்நீர் குழாய் கசிவு: 6 பேர் படுகாயம்
ராதாபுரம்,மே.14 (டி.என்.எஸ்) கூடங்குளம் அணு உலையில் உள்ள நீராவி கலனில் இன்று ஏற்பட்ட வெப்பநீர் கசிவால் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராதாபுரம் அருகே கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள முதல் அணு உலையில் இன்று (புதன்கிழமை) வழக்கம் போல் மின்சாரம் உற்பத்தி நடைபெற்றது.

அங்குள்ள நீராவி கலனில் இருந்து வெளியேற்றப்பட்ட வெப்பநீர் திடீரென கசிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அணு உலையின் நிரந்தர தொழிலாளர்களான கூடங்குளத்தைச் சேர்ந்த விஞ்ஞானியின் உதவியாளர் பவுல்ராஜ், தொழில்நுட்ப உதவியாளர்களான ராதாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார், கூடங்குளம் அருகே
ஸ்ரீரங்கநாராயணபுரத்தை சேர்ந்த ராஜன் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புதூரை சேர்ந்த ராஜேஷ், மார்த்தாண்டத்தை சேர்ந்த வினு, தென்காசியை சேர்ந்த மகேஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த 6 பேரும் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். (டி.என்.எஸ்)
source:  tamil.chennaionline.com

No comments:

Post a Comment