Saturday, May 03, 2014

இந்தியர்களுக்கு வாடகைக்கு வீடு இல்லை என்று சிங்கப்பூர் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தியர்களுக்கு சிங்கப்பூர் மக்கள் கொடுத்த அதிர்ச்சி!சிங்கப்பூர்: இந்தியர்களுக்கு வாடகைக்கு வீடு இல்லை என்று சிங்கப்பூர் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சிங்கப்பூரில் குறைந்த வாடகைக்கு வீடுகளை விடுவது தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் இணையதளங்களில் நேரடியாக விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். அதில், இந்தியர்கள் அணுக வேண்டாம், என்ற சிறப்பு வாசகங்களுடன் தற்போது வீடுகளை வாடகைக்கு விடுகின்றனர்.


சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் 74 சதவீதம் பேர் சீனாவை பூர்வீகமாக கொண்டவர்களும், 13 சதவீதம் பேர் மலாய் பேசும் மக்களும், 9 சதவீதம் பேர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் உள்ளனர். அந்நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் சொந்த வீடுகளில்தான் வாழ்கிறார்கள்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி வருபவர்களே வாடகைக்கு வீடு தேடி அலைகிறார்கள். ஆனால், சமீபகாலமாக இவ்வாறு வீடு தேடுபவர்களுக்கு நாட்டை காரணம் காட்டி வீட்டின் உரிமையாளர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்து வருகிறார்கள்.

இதனையடுத்து, இந்தியர்களுக்கு எதிராக பெருகிவரும் இத்தகைய பாகுபாடு மற்றும் பாரபட்சத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் மற்றும் பிரதமர் லீ ஹ்சியென் லூங் ஆகியோரை அனைத்துலக இந்துத்துவ சங்கத்தின் தலைவர் ராஜன் ஜெட் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே இந்தியர்கள் மசாலாக்களை அதிகமாக உணவில் சேர்த்து சமைப்பதால் வெளிவரும் வாசனை சிங்கப்பூர்வாசிகளுக்கு பிடிப்பதில்லை. நமது நறுமணத்தை அவர்கள் நெடி என்று நினைத்து மூக்கை மூடிக்கொள்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால்தான் இந்தியர்களுக்கு பிளாட்டுகள் மற்றும் அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு கொடுக்க தயங்குவதாக பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment