http://youtu.be/jg5ApRvdiOY
வடமாகாணசபையின் கைதடியிலுள்ள பேரவை கட்டிடம் முன்பதாக இன்று ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரினை ஒரு சில வினாடிகளினில் காலால் மிதித்து அணைத்தனர் இலங்கைப்பொலிஸார். இறந்த மக்களுக்காகவும் போராளிகளுக்காகவும் , முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் தீபத்தை ஏற்றினார். ஆனால் விரைந்து வந்த பொலிசார் அதனைக் கைகளால் தட்டிவிட்டனர், பின்னர் கால்களால் அதனை மிதித்து அவமானப்படுத்தியுள்ளார்கள். இக்காட்சிகள் அடங்கிய வீடியோ பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சற்றும் பயம் கொள்ளாது, திரு சிவாஜிலிங்கம் அவர்கள், இறந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தாம் வீர வணக்கம் செலுத்துவதாக கூறி, அப்படியே நின்றார். லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள, மே 18 நிகழ்வை பார்த்து இலங்கை அரசு மிரண்டுபோகவேண்டும். மக்கள் அலை எனத் திரண்டு ரவல்கர் சதுக்கத்தை அடையவேண்டும். மறக்காமல் தேசிய கொடிகளை மக்கள் அனைவரும் கொண்டுவரவேண்டும் ! எமது அடையாளத்தை நாம் இழந்துவிட முடியாது அல்லவா !
No comments:
Post a Comment