
முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியினால் மேற்க்கொள்ளப்பட்ட ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூரகத்திற்கு செல்ல விடாது பொலிசாரினால் இடையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
நல்லூர் கைலாய பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சுலோகங்களை தாங்கிய வண்ணம் புறப்பட்ட கட்சியின் ஊர்வலம் கோவில் வீதி பொஸ்கோ பாடசாலை வீதி வழியாக சென்ற யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துனைத் தூரகம் அமைந்துள்ள மருதடி ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட வேளையில் ஊர்வலம் பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கட்சியின் செயலாளர் பொலிசாரிடம் தாம் அமைதியான முறையில் இந்த ஊர்வலத்தை நடத்துவதாகவும் தமது மகஜரை துணைத் தூதுவராலயத்தில் வழங்கி விட்டு செல்வதாக எடுத்துக் கூறிய போதிலும் அதனை பொலிசார் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் கட்சியின் செயலாளர் எஸ்.விஜயகாந் பொலிசாரினால் அழைத்து செல்லப்பட்டு துணைத் தூதரகத்தின் பதில் பொறுப்பாளராக இருக்கும் மூர்த்தியிடம் மகஜரை கையளித்துள்ளார்.

01. எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களின் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நிரந்தர முடிவொன்றை எடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பதனூடாக, தமிழகத்திற்கும் எங்களுக்குமாக தொப்புள்கொடி உறவை வலுப்படுத்த உதவவேண்டும் என்பது முதலாவது கோரிக்கையாகும்.

02. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசாங்கம் 50,000 வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப் படுத்தியுள்ள போதிலும், அதன் செயல்பாடுகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. இதனை துரிதப்படுத்துவதோடு, மேலும் 10,000 பேருக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கையாகும்.

03. 13ஆம் திருத்தச் சட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல், அதில் குறிப்பிடப்பட்ட அனைத்து சரத்துகளையும் உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது மூன்றாவது கோரிக்கையாகும்.

இந்த மூன்று அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்தே இவ் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் பிரதமமந்திரி நரேந்திர தாமோதரதாஸ் மோடிக்கு முகவரியிடப்பட்ட இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. வரலாற்று ரீதியாக இந்தியாவும் இலங்கையும் நட்பு நாடுகளாக இயங்கி வருகின்றது. சுதந்திரத்திற்கு முன்பும் அதன் பின்னரும் இந்தியாவின் நல்லாட்சி இலங்கை தமிழ் மக்களின் நல்வாழ்விற்க்கு பல வழிகளிலும் பக்கத்துனையாக இருந்து வருகின்றது.
இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழ் மீனவ மக்களின் வாழ்வாதாரமானது இந்திய மீனவர்களின் சட்டவிரோதமான மீன் பிடிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட முரண்பட்ட சூழ் நிலைக்குப் பின்னர் எமது தமிழ் மீனவாகள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
அவ்வேளையில் இவ்வாறான இந்திய சகோதரர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன் பிடிப்பானது நொந்துபோன எமது தமிழ் மக்களிற்கு மேலும் வலியை எற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வருட காலப் பகுதிகளில் கிட்டத்தட்ட 132 மீனவப் படகுகளும் 588 இற்க்கும் மேலான மீனவர்களும் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு 15 தடவைக்கு மேல் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
எனவே இவ்வாறான தொடாச்சியான சம்பவங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க எமது மீனவர்களிற்க்கும் தென்னிந்திய மீனவர்களுக்கமான நட்புக்கும் பாதகமான ஒரு நிலமையை தோற்றுவித்துள்ளது.
ஆகவே மான்புமிகு பிரதம மந்திரிக்கு எமது கட்சியூடாக இலங்கை தமிழ் மக்களின் தாழ்மையான வேண்டுகோள் இலங்கை இந்திய கடலோர பாதுகாப்பினை பலப்படுத்தி இவ்வாறான சட்டவிரோத மீன் பிடியினை நிறுத்தி வடபகுதி மீனவர்களின் வாழ்க்கையை செழிப்படையச் செய்யுங்கள்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்து முடிந்த யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் எமது ஸ்திரமற்ற சூழ் நிலையை நிவர்த்தி செய்வதற்க்கு இந்திய அரசினால் புனர் நிர்மானம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டன. இவ்வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாக உறுதியளித்து நடைமுறைப்படுத்தப்பட்டது.
அந்த வகையில்மேலும் 10 ஆயிரம் வீடுகளை யுத்த்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளான யாழ் மாவட்டம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைத்து தருமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
கடந்த பல ஆண்டுகளாக ஈழத் தமிழருக்கான அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் பல வடிவங்களில் மேற்க்கொள்ளப்பட்டு வந்தது. இன்று வரை தமிழ் மக்களின் சுயநிர்ணயப் பிரச்சனை தீராப் பிரச்சனையாகவே காணப்படுகின்றது. எமது கட்சியின் நிலைப்பாடானது 1987 ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13வது திருத்தச் சடடத்தில் இலங்கை வாழ் தமிழருக்கும் ஏனைய சிறுபான்மையினருக்கும் திருப்தியின்மை காணப்பட்டாலும் குறைந்த பட்சமேனும் 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களினதும் ஏனைய சிறுபான்மை மக்களினதும் சுயநிhண்ய உரிமைக்கு வித்திடும் என்பதினால் 13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.source:pathivu
No comments:
Post a Comment