Thursday, June 12, 2014

ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் இன்று கோரிக்கை விடுத்துள்ளன

ஐ.நா. விசாரணைக் குழு இலங்கை வர அனுமதிக்கவேண்டும் - அமெரிக்கா கோரிக்கைஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் இன்று கோரிக்கை விடுத்துள்ளன. இன்று ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26ஆவது அமர்வில் உரையாற்றிய அமெரிக்க மற்றும் பிரிட்டன் தூதுவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தனர். விசாரணைக் குழுவுடன் தொடர்புபட்டோரை, இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்ற, கெய்த் ஹாப்பர் தனது உரையில், தனது பணியகத்தின் ஊடாக, சிறிலங்கா குறித்த விசாரணைக் குழுவை ஒழுங்கமைத்ததற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சிறிலங்காவில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பனவற்றை ஊக்குவிக்க, விசாரணைச் சமிக்ஞைகள் முக்கியமானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணையாளர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கு தகவல்களை வழங்குவோர் மீதான பதிலடிகளைத் தவிர்த்தும் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்கிறார் என அவர் குறிப்பிட்டார். அதேவேளை, நவநீதம்பிள்ளை ஆற்றிய தலைமையுரையில், ஏற்கனவே வெளியான வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போலவே, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -   source:malarum.com
The. UN investigation to support the Sri Lankan government had requested that the United States and Britain today. I began today in Geneva. 26th session of the UN Human Rights Council issued the appeal in a speech to the American and British ambassadors. Related to the investigation committee, asked that he be allowed to Sri Lanka. America's new ambassador to the Geneva office, Keith Hopper, in his speech, through its Bureau, Sri Lanka, to the organizing committee of inquiry. UN Human Rights Commissioner thanked cannons.
Accordingly, justice, accountability, etc. to promote reconciliation, he said investigators are important signals. Allow investigators to come to Sri Lanka, the. UN Human Rights Commissioner of the Bureau of avoiding reprisals against informants cooperated fully with the investigation, providing the Sri Lankan government said that they find appealing. Meanwhile, in the keynote speech cannons, already published, as stated in the draft report, the government had asked the government to provide cooperation to the investigation said. - Source: malarum.com

No comments:

Post a Comment