turkey_CIமுஸ்லிம்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு துருக்கி கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கை வாழ் அனைத்து இன சமூகங்களும் சமாதான சூழ்நிலையில் வாழ்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ளது.

2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கை வாழ் மக்களின் சமாதானத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது. சிறுபான்மை இன மற்றும் மத சமூகங்கள் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக துருக்கிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.