Tuesday, July 08, 2014

ஆட்சியைக் கவிழ்க்க கணினிப் பயிற்சி அளிக்கிறது அமெரிக்கா! அரசாங்கம் குற்றச்சாட்டு

நீதியான சமூகம் மற்றும் ஜனநாயக முன்னேற்றத்திற்காக சமூக வலையத்தளங்களை பயன்படுத்தும் விசேட பயிற்சி திட்டத்திற்காக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் 5 ஆயிரம் இலங்கை இளைஞர்கள், யுவதிகளை இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கான சம்பளத்தை அமெரிக்கத் தூதரகமே வழங்க உள்ளது.

அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த இளைஞர், யுவதிகளை இதில் இணைத்து அடுத்து நடைபெற போகும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்வதே இதன் குறுகிய கால திட்டமாகும். இந்த நடவடிக்கையின் மூலம் தேர்தலில் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது போனால், மத்திய கிழக்கில் ஏற்பட்டது போல அரசியல் புரட்சியை மேற்கொள்வது இந்த திட்டத்தின் நீண்டகால நோக்கம் என அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

No comments:

Post a Comment