மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று இந்தியா சென்றடைந்துள்ளார்.
நேற்றுக்காலை கொழும்பில் இருந்து புறப்பட்டு, ஹைதராபாத்தை சென்றடைந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், இன்று முழுவதும் அங்கேயே தங்கியிருப்பார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரை இன்று அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
சிறிலங்காவுக்கும், இந்த மாநிலங்களுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவாக்குவது குறித்தே அவர் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இன்றிரவு 11 மணியளவில் புதுடெல்லியைச் சென்றடையும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், நாளை பிற்பகல் 1 மணியளவில், ஹைதராபாத் இல்லத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
புதுடெல்லியில் பாஜக அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர், வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் நடத்தப்படும் முதலாவது இருதரப்பு பேச்சுக்கள் இதுவாகும். இதன்போது, 13வது திருத்தச்சட்ட விவகாரம், மீனவர்களின் பிரச்சினை, இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம், வடக்கு மாகாணசபை விவகாரம், ஐ.நா விசாரணைக்குழு மற்றும் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், நாளை பிற்பகல் 6.40 மணியளவில், புதுடெல்லி விமான நிலையத்தில் இருந்து, கொழும்புக்குப் புறப்படுவார்.

No comments:
Post a Comment