தமிழகத்தில்
உள்ள அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகதெரிவித்து
தாக்கல் செய்யப்பட்டிருந்த மக்கள் நலன் மனு ஒன்றை சென்னை மேல் நீதிமன்றம்
ரத்து செய்துள்ளது.
திருவாதவூர், ஆணையூர் மற்றும் உச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் வாழ்கின்ற ஈழ அகதிகள் அடிப்படைவசதிகள் இன்றி சிரமப்படுவதாக இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த அகதிகளுக்கான வசதிகளை வழங்க நீதிமன்றம் மாநில அரசாங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
எனினும் இந்த மனுவிற்கு எதிர்மனுவை மாவட்ட ஆட்சியாளர் சமர்ப்பித்து, அகதிகளுக்கான நிவாரணங்கள் மற்றும் வசதிகளுக்காக மாநில அரசாங்கம் சுமார் 6 கோடி ரூபாய்களை மாதாந்தம் ஒதுக்கி வருதாக தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வசதிகளை ஏற்படுத்துவதற்கு மேலதிகமாக உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லைஎன்று தெரிவித்து, நீதிமன்றம் குறித்த மனுவை தள்ளிபடி செய்தது.

No comments:
Post a Comment