Monday, August 25, 2014

சம்பந்தனும் TNA எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே தீர்வு குறித்து பேச வரவேண்டும் !


இந்தியாவிற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்ததும், மகிந்த கடும் சீற்றமடைந்தார் என்று அறியப்படுகிறது. அவர்களது விஜயத்திற்கு முன்பாக இது குறித்த தனது கடும் அதிருப்தியை அவர் தனது பிரதிநிதி ஒருவர் மூலமாக சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார் என மேலும் அறியப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது:
இந்த விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படாதது குறித்த தனது கடும் ஏமாற்றத்தை மகிந்த தனது பிரதிநிதி ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். 'தமிழ்தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் என்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாக கொண்டது, கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர், அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான முறுகல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம். வட மாகாண சபை அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறை வேற்றியதாலேயே நான் ஆளுநரை மாற்றவில்லை, சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும், என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது' என தன்னுடைய பிரதிநிதி ஊடாக மகிந்த தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பந்தர் ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக, கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. 'நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாங்கள் அரசியல் தீர்வொன்றிற்காக பாடுபடுகிறோம், இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் அங்கு செல்கிறோம்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கூட்டமைப்பினரின் இந்திய விஜயம் குறித்து கொழும்பு சீற்றமடைவதற்கு இன்னொரு காரணமும் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய பிரதமர், மகிந்த ராஜபக்சவை தனது பதவியேற்பு விழாவில் சந்தித்தன் பின்னர் அரசாங்க பிரதிநிதி எவரையும் சந்திக்கவில்லை. இந்திய பிரதமரின் முதலாவது உத்தியோக பூர்வ விஜயம் இலங்கை பிரதிநிதி ஒருவருடனேயே இடம்பெற்றிருக்க வேண்டும் என தான் கருதுவதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பினரை சந்திப்பதற்கு அனுமதிவழங்கியுள்தன் மூலமாக, இலங்கை அரசாங்கம் 13 வது திருத்த்ததை அமுல்படுத்த வேண்டும், அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை இந்திய அரசு மீண்டும் வலியுறுத்தி உள்ளதாகவும் கொழும்பு கருதுகின்றது. ஆட்சி மாற்றம் இடம்பெற்றாலும், அடிப்படை கொள்கைகள் மாறவில்லை என்பதே தெளிவான செய்தி என அரசாங்கம் கருதுவதாக தெரியவருகின்றது. மோடியின் நிலைப்பாட்டை பொறுத்திருந்துதான் பார்கவேண்டும்.
source:athirvu

No comments:

Post a Comment