Thursday, December 11, 2014

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோரும் அரசியல் நிகழ்வுகள்

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் தமிழர் தேசம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக Aalen , Berlin மற்றும்  Bochum நகரங்களில்  பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன  .

Aalen நகர் தமிழ் மக்கள் யேர்மன் மக்களுடன் நகர மத்தியில் ஒன்றுகூடி ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் இன அழிப்பை எடுத்துரைத்து , சர்வதேச சமூகத்திடம் தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர் 
இவ் நிகழ்வில் உரையாற்றிய திரு  தனபாலசிங்கம் வைரனமுத்து அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு 65 ஆண்டுகளுக்கும் மேலாக  நடந்துகொண்டிருக்கும் மிக மோசமான மனிதவுரிமை மீறலை விளக்கியதுடன், இன்றும் ஈழத்தமிழர்கள்  தொடர்ச்சியாக இன அழிப்புக்கு முகம்கொடுத்து வருகின்றனர் என்பதை வலியுறுத்தியுள்ளார் .அத்தோடு இவ் நிகழ்வில் கலந்துகொண்ட  நகர மதகுரு Bernhard Richter  அவர்கள்  கருத்து தெரிவிக்கையில் பல்லாண்டு காலமாக தமது உரிமைகளுக்காக போராடும் தமிழ் மக்களுக்காக தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார் .



Bochum நகரத்தில் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் "சிறிலங்கா : மனிதவுரிமை அந்நிய சொல்  !"   எனும் தலைப்பில் மதகுரு ஆல்பேர்ட் கோலன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் இன அழிப்பு விடையமாக தனது கருத்தை பதிவு செய்ததோடு குறிப்பாக ஈழத்தமிழர்கள் இன்றும் எவ்வித அடிப்படை சுதந்திரமும் இல்லாமல்  சிங்கள பௌத்த பேரினவாத அரசின்  ஆக்கிரமிப்பாலும், இராணுவமயமாக்கலாலும் நிலஅபகரிப்பாலும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலும் அழிக்கப்படுகின்றனர் என்பதை விரிவாக எடுத்துரைத்தார் .
Berlin நகரில்  யேர்மன் மனிதவுரிமை நிறுவனத்தால் நடைபெற்ற சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்ட நிகழ்வில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பு விடையம் முக்கிய கருப்பொருளாக பேசப்பட்டது. இவ் நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்ச்செயற்பாட்டாளரின் தமிழின அழிப்புக்கான நீதி சார்ந்த கேள்விகளுக்கு பேச்சாளர்களாக கலந்துகொண்ட மனிதவுரிமை சட்டநிபுணர்கள் மௌனமாக இருந்தது பார்வையாளர்கள் அனைவரையும் சிந்திக்க வைத்தது .
அத்தோடு சர்வதேச மனிதவுரிமை நாளான நேற்று பேர்லின் நகரில் அதிகமாக மக்கள் நடமாடும் தொடரூந்து நிலையத்தில் தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பதாதைகள்  கட்டப்பட்ட வகையில்   கவனயீர்ப்பு ஏற்படுத்தப்பட்டது.



தமிழ் இளையோர் அமைப்பு
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி 
source:athirvu

No comments:

Post a Comment