Monday, December 15, 2014

புலிகள் மீதான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்கிறது பிரித்தானிய அரசு:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்தது, ஒரு அவசரமான முடிவு என்று அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது யாவரும் அறிந்ததே. இதற்கு அமைவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகளின் தடையை நிக்கலாம் என்ற சமிஞ்சையை அத்தீர்ப்பு கொண்டிருந்தது. இதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

எனினும், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் தீர்மானம் புலிகளுக்கு எதிரான பிரித்தானிய தடை உத்தரவில் மாற்றம் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளுர் சட்டங்களின் அடிப்படையில் தடை தொடர்பான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 மாம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. source:athirvu

No comments:

Post a Comment